தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் சாகித் கபூர், சைப் அலிகான், கங்கனா ரணாவத் நடிப்பில் நேற்று வெளியான படம் ‛ரங்கூன்'. முக்கோண காதல் கதையுடன் இரண்டாம் உலகப்போரையும் கலந்து இப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர். வித்தியாசமான கதைக்களமாக இருந்த போதும் அதை இயக்குநர் சற்று குழப்பத்துடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதனால் தான் என்னவோ படத்தின் முதல்நாள் வசூல் சற்று குறைவாக இருப்பதாக கூறுகிறார்கள். ரங்கூன் படம் முதல்நாளில் ரூ.6.07 கோடி தான் வசூலித்திருக்கிறது. இப்படம் வசூலை குவிக்குமா...? என்று பொறுத்திருந்து பார்ப்போம்...!