தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ள அமலா பால் கன்னடத்தில் அறிமுகமாகும் 'ஹெப்புலி' படம் நேற்று வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில்தான் அமலா பாலின் அறிமுகம் சரியாக அமையவில்லை. 'மைனா' படத்திற்குப் பிறகுதான் அவரை யாரென்றே இங்குள்ள ரசிகர்களுக்குத் தெரிந்தது. அதற்கு முன்னதாகவே அவர் “வீரசேகரன், சிந்து சமவெளி, விகடகவி” ஆகிய படங்களில் நடித்துவிட்டார். ஆனால், 'மைனா' படத்தின் வெற்றிதான் அவரை வெளியில் தெரிய வைத்தது.
தொடர்ந்து விக்ரமுடன் 'தெய்வத் திருமகள்', ஆர்யாவுடன் 'வேட்டை', விஜய்யுடன் 'தலைவா', ஜெயம் ரவியுடன் 'நிமிர்ந்து நில்', தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி', ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் போதே இயக்குனர் விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
இருந்தாலும், நேற்று வெளியான 'ஹெப்புலி' படத்திற்கு நாயகன் சுதீப் ரசிகர்களிடமிருந்தும், கன்னட ரசிகர்களிடமிருந்தும் கிடைத்துள்ள வரவேற்பு அமலா பாலை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கும்.
தமிழில் தற்போது 'வேலையில்லா பட்டதாரி 2, வட சென்னை, திருட்டுப் பயலே 2' ஆகிய படங்களில் அமலா பால் நாயகியாக நடித்து வருகிறார்.