மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களது மகன், எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மேலூர் கோர்ட் நடிகர் தனுசை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்தும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரியும் நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அங்க அடையாளங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து நடிகர் தனுஷ் சார்பில் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டது. இதையடுத்து சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்களை ஒப்பிட்டு பார்க்க, நடிகர் தனுஷ் வருகிற பிப்., 28-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவு பிறப்பித்தார்.