மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் |
அரண்மனை-2, ஜில் ஜங் ஜக் படங்களுக்குப்பிறகு சைத்தான் கா பச்சா, குருதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த். இதில் சைத்தான் கா பச்சா படத்தை கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்குகிறார். சித்தார்த்துடன் ராசி கண்ணா, வம்சி கிருஷ்ணா, தம்பி ராமைய்யா, யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.
மேலும், இந்த சைத்தான் கா பச்சா படம் ஆக்சன் கலந்த காமெடி கதையில் உருவாகியுள்ளதாம். ஜில் ஜங் ஜக் படத்தில் ஒரு வித்தியாசமான கதையில் நடித்த சித்தார்த், இந்த படத்தில் இன்னொரு மாறுபட்ட கோணத்தில் நடிக்கிறாராம். அதாவது அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் பார்ப்பதற்கு பைத்திக்காரத்தனமாகவே இருக்குமாம். அதனால் சைத்தான் கா பச்சா என்ற தலைப்பின் கேப்சனாக பைத்தியக்கார பையன் -என்று குறிப்பிடப்போகிறாராம் சித்தார்த்.