பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்த டைரக்டரின் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என நடிகர்கள் கூறிய காலம் போய், இப்போது இந்த நடிகர் அல்லது நடிகையை வைத்து படமெடுக்க ஆசைப்படுகிறேன் என டைரக்டர்கள் கூறும் காலம் வந்து விட்டது. டைரக்டர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா, சமீபத்தில் ரங்கூன் படம் பார்த்துள்ளார். அந்த படத்தில் கங்கனாவின் நடிப்பை பார்த்து அசந்து போன ராகேஷ், கங்கனாவை வைத்து ஒரு படமெடுக்க வேண்டும் ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். ரங்கூன் படத்தை பார்த்து விட்டு கருத்து தெரிவித்த ராகேஷ், நான் கங்கனாவை வைத்து படமெடுக்க ஆசைப்படுகிறேன். இது பற்றி கங்கனாவிடமும் ஏற்கனவே கூறி இருக்கிறேன். கங்கனாவின் நடிப்பு மற்றும் பர்சனாலிட்டிக்கு நான் மிகப் பெரிய ரசிகன். கங்கனாவை வைத்து படமெடுக்கும் வாய்ப்பு மட்டும் எனக்கு கிடைத்து விட்டால், அவருடன் மீண்டும் வேலை செய்ய விரும்புவேன் என்றார்.