தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2017ம் ஆண்டு ஆரம்பித்த பின் முதல் 7 வெள்ளிக் கிழமைகளில் மிகக் குறைவான படங்களே வெளிவந்தன. கடந்த வாரம் பிப்ரவரி 17ம் தேதி 7 படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் 5 படங்கள் மட்டுமே வெளிவந்தது.
இந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 24ம் தேதி 'மொட்ட சிவா கெட்ட சிவா, யமன், முத்துராமலிங்கம், கனவு வாரியம்' ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் வெளிவராது என்று தகவல் வெளியாகியுள்ளது.
படத்திற்கு பைனான்ஸ் கொடுத்தவர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்திய சூழ்நிலையில் இந்தப் படம் மேலும் தள்ளிப் போக வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். கடந்த வாரம் 17ம் தேதியே இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் இந்த வாரத்திற்கு படத்தைத் தள்ளி வைத்தார்கள். இப்போது அதுவும் நடக்குமா என்பது சந்தேகமே. அதனால், வரும் வெள்ளியன்று நான்கு முனைப் போட்டி இல்லாமல் மும்முனைப் போட்டிதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் இந்த வாரம் வெளிவராமல் போனால், அவர் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான 'சிவலிங்கா' படம் திரைக்கு வருவதில் மேலும் தாமதமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.