விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா |
ஆன்கென் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதில் அமிதாப் பச்சன், அனில் கபூர், அர்சத் வர்ஷி, அர்ஜூன் ராம்பால், இஷா குப்தா ஆகியோர் நடிக்க உள்ளனர். முதல்பாகத்தில் நடித்த அக்ஷ்ய் குமார், இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை.
இதுப்பற்றி அர்ஜூன் ராம்பால் கூறியிருப்பதாவது... ‛‛ஆன்கென்-2வில் அக்ஷ்ய் நடிக்கவில்லை, ரொம்பவே மிஸ் செய்கிறேன். அவர் நடிக்காதது வருத்தம் அளிக்கிறது. அக்ஷ்ய் பிஸியான ஸ்டார், அவரை முடிந்தவரை நடிக்க வைக்க முயற்சி எடுத்தோம், ஆனால் நாங்கள் கேட்ட கால்ஷீட் தேதியை அவரால் ஒதுக்க முடியவில்லை. முதல்பாகத்தை விட ஆன்கென்-2, இன்னும் த்ரில்லாக, ஆக்ஷ்ன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.