நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? |
நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலி கான், தர்மா புரோடெக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் நடிக்க வந்துள்ளார். ஆனால் தனது மகள் நடிக்க வந்துள்ளதை சைப் விரும்பவில்லை என கடந்த சில நாட்களாக பாலிவுட்டில் செய்தி பரவி வருகிறது. சமீத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இது பற்றி சைப் அலி கானிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்த தகவல்கள் முற்றிலும் தவறானது. தர்மா புரோடெக்ஷன்ஸ் மூலம் சாரா நடிக்க வந்துள்ளதால் மிகவும் சந்தோஷப்படுகிறேன். மிகவும் நிம்மதியாகவும் உணர்கிறேன். கடந்த 2 நாட்களாக இது போன்ற பல பிதற்றலான செய்திகளை படித்து வருகிறேன். துவக்கத்திலேயே கரன் ஜோகரின் படத்தில் சாரா நடிப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அறிமுக நடிகர்களை கையாள்வதில் அவர் திறமை வாய்ந்தவர். அவரிடம் எனக்கு பிடித்த விஷயமும் கூட. கரன் ஜோகர் அவளுக்கு சரியான உடையை, சரியான தோற்றத்தை, பொருத்தமான வேடத்தை கொடுத்துள்ளார். அப்படி இருக்கும் போது நான் ஏன் கவலைப்பட போகிறேன்? என்றார். சைப் அலிகான் தற்போது தான் நடிக்கும் ரங்கூன் படத்தின் வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். இப்படம் பிப்ரவரி 24ம் தேதி ரிலீசாக உள்ளது.