ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியன் சினி மேக்கர்ஸ் சார்பில் ஜெயக்குமார் தயாரித்துள்ள படம் சிரிக்க விடலாமா? தயாரிப்பாளரே பாடல்களை எழுதி இசை அமைத்துள்ளார். கே.பாக்யராஜின் உதவியாளர் வி.பி.காவ்யன் இயக்கியுள்ளார். வி.ஆர்.விநாயக், நிதின் சத்யா, சீனிவாசன், சவுமியா, ஷீலா, தீபா ஆகியோர் நடித்துள்ளனர் இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பாடல்களை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசியதாவது:
எப்போதுமே நல்ல படங்கள் ஓடத்தான் செய்கிறது. இதற்காக ரசிகர்களை குற்றம் சொல்லக்கூடாது. இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கிற மாதிரி சினிமா இருக்க வேண்டும். முன்பெல்லாம் குடும்பம் குடும்பமாக சினிமாவுக்கு செல்வார்கள். இப்போது குடும்பத்தோடு செல்வது குறைந்து விட்டது. காரணம் டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்ந்துவிட்டது. இதனை சரி பண்ணினால் மக்கள் மீண்டும் குடும்பத்தோடு தியேட்டருக்கு வருவார்கள். என்றார்.