தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் டைகர் ஷெரப்பும் ஒருவர். மாஜி ஹீரோ ஜாக்கி ஷெரப்பின் மகனான இவர், பிஸியான நடிகராக பாலிவுட்டில் வலம் வருகிறார். தற்போது இவர் இயக்குநர் சபீர் கானின் இயக்கத்தில் ‛முன்னா மைக்கேல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனது தந்தை ஜாக்கி ஷெரப்பை கெளரவப்படுத்தும் விதமாக ஒரு பாடல் ஒன்றை அவருக்கு சமர்பித்திருக்கிறார் டைகர். இதன் ஸ்டில்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் டைகர், தனது தந்தை போன்று தோன்றுகிறார்.
இதைப்பற்றி டைகர் ஷெரப் கூறியதாவது.... "இந்தப்பாட்டிற்கு கணேஷ் ஆச்சார்யா நடனம் கற்று தருவது பெருமையாக இருக்கிறது. இப்பாடலை என் தந்தைக்கு சமர்பிக்கிறேன். என் தந்தையை இதைவிட வேறு எந்த விதத்திலும் பெருமைப்படுத்த முடியாது" என்று கூறியுள்ளார்.
‛முன்னா மைக்கேல்' படம், இந்த ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி ரிலீஸாகிறது.