பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான பாகுபலி-2விற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தாண்டு உறுதியாக வருகிற ஏப்., மாதம் ரிலீஸாக இருக்கிறது. தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் சுமார் 30க்கும் மேற்பட்ட ஸ்டுடியோக்களில் நடைபெற்று வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் பாகுபலி-2 படத்தில் நடிகர் ஷாரூக்கானும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதோடு, படத்தில் பிரபாஸுக்கும், ராணாவுக்கும் இடையே நடக்கும் போரில் சமாதான தூதுவர் ரோலில் ஷாரூக்கான் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை படக்குழு மறுத்துள்ளது. ஷாரூக்கானை அனைவருக்கும் பிடிக்கும், அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை என்கிறார்கள்.
முன்னதாக ஷாரூக்கான் நடிப்பதாக கூறப்படும் ரோலில் சூர்யா, மோகன்லாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பாகுபலி-2 படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், உள்ளிட்ட பல மொழிகளில் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.