'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சுல்தான் படத்தின் வெற்றிக்கு பிறகு சல்மான்கான், கபீர்கான் இயக்கத்தில் ‛டியூப்லைட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் சில தினங்களுக்கு முன்னர் நிறைவுற்றது. இதைத்தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கபீர்கான் இயக்கிய ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம், டைகர் ஜிந்தா ஹே என்ற பெயரில் உருவாகிறது. இதிலும் சல்மான்-கத்ரீனா ஜோடி நடிக்கிறார். அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார். அலி அபாஸ் ஜாபர் ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் இயக்குநர் கபீர்கான் கூறியிருப்பதாவது...
என்னால் டைகர் படம் ஆரம்பிக்கப்பட்டது, தற்போது அதை அலி அப்பாஸ் தொடருகிறார். இது மகிழ்ச்சியை தருகிறது, அலி அப்பாஸ் ஜாபர் என்னிடம் உதவி இயக்குநராக இருந்தவர், எனது நண்பரும் கூட. டைகர் கேரக்டரில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் வேறு ஒரு கதைக்களத்தில் வித்தியாசமான கதையை சொல்ல இருக்கிறார் அலி அப்பாஸ் என்று கூறியுள்ளார்.