ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த சர்தார் கபார் சிங் படத்தில் குத்தாட்டம் போட்டு டோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்தார் ராய் லக்ஷ்மி. அப்பாடலின் வெற்றி ராய் லக்ஷ்மிக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் குத்தாட்ட வாய்ப்பை பெற்று தந்தது. இயக்குனர் விவி வி நாயக் இயக்கத்தில் சிரஞ்சீவி இரட்டை வேடங்களில் நடித்துள்ள கைதி நம்பர் 150 திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ல் திரைக்கு வந்து வெற்றி நடைபோட்டு வருகின்றது. இப்படத்தில் சிரஞ்சீவியுடன் ராய் லக்ஷ்மி போட்ட குத்தாட்ட பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று தந்துள்ளது.
தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ள அவரது 27வது திரைப்படமான ஜெய் லவகுச எனும் ஆக்ஷன் படத்திலும் ராய் லக்ஷ்மி ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தமாகியுள்ளாராம். இயக்குனர் பாபி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஜெய் லவகுச படத்தை ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரர் கல்யாண் ராம் தயாரிக்கின்றார். அனுபமா பரமேஷ்வரன், ராக்ஷி கண்ணா என இரு நாயகிகள் நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் பிப்ரவரி 11ல் துவங்கவுள்ளது.