வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவும், நடிகை பூமி பெட்னேகரும் மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனராம். டைரக்டர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்க உள்ள இப்படத்திற்கு சுப் மங்கல் சாவ்தான் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் தமிழில், கல்யாண சமையல் சாதம் என்ற பெயரில் வெளிவந்த படத்தின் ரீமேக்காம். இப்படம் ஒரு இளைஞனை பற்றியதாம். அந்த இளைஞன் தனது திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் ஆண்மை குறைபாடு நோயால் பாதிக்கப்படுகிறான். அதனை அவனும், அவனை திருமணம் செய்து கொள்ளும் பெண் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது தான் படத்தின் மீதி கதை. இப்படத்தை ஆனந்த் எல்.ராய் தயாரிக்க உள்ளார்.