கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
இயக்குனர் பாரதிராஜாவால் புதிய வார்ப்புகள் படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் ரதி. அதன்பிறகு நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, கழுகு உள்பட பல படங்களில் நடித்தார். பின்பு ரதி அக்னிகோத்ரி என்ற பெயரில் பாலிவுட்டில் முன்னணி நடிகை ஆனார்.
சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் மும்பை தொழில் அதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானர். அவ்வப்போது படங்களிலும், இந்தி சீரியல்களிலும் நடித்து வந்தார். மும்பை ஒர்லி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
ரதி வீட்டில் மின்சார மோசடி நடப்பதாக மின்வாரியத்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் ரதியின் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியதில். அவர் வீட்டில் உள்ள சில மின் மீட்டர்களை ஓடாமல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கீடு செய்து பார்த்ததில் கடந்த 3 ஆண்டுகளில் அவர் 49 லட்சம் ரூபாய் அளவிற்கு மின் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் ரதி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.