தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொங்கலுக்கு வெளிவந்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்து திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது 'பைரவா'. இந்த படத்தைத் தொடர்ந்து ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம்தான். 'தெறி' படத்தின் சூப்பர்ஹிட் வெற்றியால் விஜய்க்கு 35 கோடி அட்லீக்கு 6 கோடி சம்பளம் கொடுத்து இந்த கூட்டணியை வைத்து படம் தயாரிக்கிறது தேனாண்டாள் பிலிம்ஸ்.
விஜய் 61 வது படமாக உருவாகும் இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்றபோது விஜய்க்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்று நீண்ட ஆலோசனை நடைபெற்று, கடைசியில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். நயன்தாரா, ரகுல் ப்ரீத்சிங், அக்ஷரா ஹாசன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும் தகவல் அடிபடுகிறது. சில பல காரணங்களால் கடைசியில் காஜல் அகர்வால் ஓகே செய்யப்பட்டாராம்.
விஜய் 61 படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், ''அட்லி படத்தில் விஜய்க்கு நாயகியாக நடிக்கிறீர்களா?'' என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேட்ட கேள்விக்கு 'ஆம்' என பதிலளித்துள்ளார் காஜல் அகர்வால். இதன் மூலம் அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களில் ஏற்கெனவே விஜய்க்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் மூன்றாவது தடவையாக தற்போது இணைந்து நடிக்கிறார். பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்கும் இப்படத்துக்காக, தற்போது முறுக்கு மீசை, தாடியுடன் வலம் வருகிறார் விஜய்.