மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கில் 2015-ஆம் ஆண்டு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஆக்சன் படம் ‛டெம்பர்'. தற்போது இப்படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ரோகித் ஷெட்டி ரீமேக் செய்ய இருக்கிறார். படத்தின் ஹீரோவாக நடிகர் ரன்வீர் சிங் நடிக்கயிருக்கிறார். சில தினகங்களுக்கு முன் நடிகர் ரன்வீர் மற்றும் இயக்குநர் ரோகித்தும் இணைந்து பணியாற்ற போவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் கதை உருவாக்கும் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. தற்போது இயக்குநர் ரோகித் ‛கோல்மால் அகைன்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்தப்படத்தை முடித்ததும் டெம்பர் ரீ-மேக்கை துவக்க உள்ளார் ரோகித். தற்போது இந்தப்படத்திற்கு தற்காலிகமாக ‛மை நேம் இஸ் லகான்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.