ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் சோனாக்ஷி சின்ஹாவும் ஒருவர். கடந்த நவம்பரில் இவரது நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‛போர்ஸ் -2'. தற்போது இயக்குநர் சுனில் சிப்பி இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள படம் ‛நூர்'. இப்படத்தை பூஷன் குமார், விக்ரம் மல்ஹோத்ரா மற்றும் ஷிகா சர்மா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ‛நூர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது நிறைவு பெற்றிருக்கிறது.
இதைப்பற்றி சோனாக்ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது... "நூர் படத்தின் மூலம் நிறைய விசயங்கள் கற்றுக் கொண்டேன். இப்படத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு என் நன்றி'' என்று கூறியிருந்தார்.
நூர் படம் சபா இம்தியாஸ் எழுதிய நாவலான ‛கராச்சி யு ஆர் கில்லிங் மீ'-ஐ வைத்து உருவாக வருகிறது. சோனாக்ஷி பத்திரிக்கையாளராக நடிக்கிறார். இவருடன் நடிகை சன்னி லியோன் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருக்கிறது.