டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் தெறி. இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்த விஜய், அதற்காக தனது உடல் எடை மற்றும் ஹேர்ஸ்டைலையும் மாற்றி மிடுக்காக தோன்றினார். அந்த தோற்றம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, விஜய்க்கும் அதிகம் பிடித்து விட்டது. அதையடுத்து மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்த விஜய், தற்போது அந்த படத்தில் நடிப்பதற்கும் தயாராகிவிட்டார்.
மேலும், சமீபத்தில் வெளியான பைரவாவில் விஜய்யின் ஹேர்ஸ்டைலில் விக் இடம்பெற்றது. ஆனால் புதிய படத்தில் அவர் விக் வைத்து நடிக்கப்போவதில்லையாம். இதுவரையில்லாத ஒரு ஸ்டைலிஷான விஜய்யை வெளிப்படுத்துகிறார் அட்லி. அதன்காரணமாக, தான் சேகரித்த சில வித்தியாசமான ஹேர் ஸ்டைல்களை விஜய்யின் கவனத்துக்கு கொண்டு சென்றாராம் அவர். அதில் விஜய் ஓகே செய்த கெட்டப்பில் தற்போது அவரை டோட்டலாக மாற்றியிருக்கிறார் அட்லி. அந்தவகையில், வழக்கத்தைவிட அதிகமான மீசையுடன் தாடி வைத்த கெட்டப்பில் தனது 61வது படத்தில் விஜய் நடிப்பது தெரியவந்துள்ளது.