தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பரதேசி, பேராண்மை, அரவான், கபாலி படங்களில் நடித்தவர் தன்ஷிகா. தற்போது எங்க அம்மா ராணி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்ஷிகா சினம் என்ற குறும்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து வருகிறார். நேசன் திருநேசன் என்கிற லண்டன் வாழ் தமிழர் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆனந்த மூர்த்தி இயக்குகிறார். சரவணன் நடராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதில் மேற்கு வங்கத்தில் வாழும் தமிழ்நாட்டு பெண்ணாகவும், பாலியல் தொழிலாளியாகவும் தன்ஷிகா நடிக்கிறார். அவரை பேட்டி எடுக்கும் ஆவணப்பட இயக்குனராக மேற்கு வங்க நடிகை பிடிட்டா பேக் நடித்துள்ளார்.
ஆவணப்பட இயக்குனர் தற்செயலாக தமிழ்நாட்டை சேர்ந்த பாலியல் தொழிலாளியை சந்திக்கிறார். அவர் எப்படி மேற்கு வங்காளம் வந்தார். அவர் பாலியல் தொழிலாளியாக மாறியது எப்படி அவரை இந்த சமூகம் எப்படி வஞ்சித்தது என்பதுதான் குறும்படத்தின் கதை. 25 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தில் தன்ஷிகா துணிச்சலுடன் நடித்திருக்கிறார்.