தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள நடிகை அனுபமா பரமேஷ்வரன் பிரேமம் படத்தின் வாயிலாக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் மனத்திலும் இடம்பிடித்து விட்டார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டி வரும் அனுபமாவிற்கு தெலுங்கு படங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. சர்வானந்துடன் சதமானம் பஹதி படத்தில் நடித்துள்ள அனுபமா பரமேஷ்வரன் அடுத்ததாக, ராம் சரணுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. இதனை அனுபமாவும் உறுதி செய்துள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கும் கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் ராம் சரண் காது கேட்பதில் குறைபாடு உடையவராக நடிக்கவுள்ளார். இதில் அனுபமா பரமேஷ்வரன் ராம் சரணுக்கு ஜோடியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இத்தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனுபமா தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராம் சரணுடன் நடிப்பதாக அறிவித்துள்ளார்.