Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தேசியவிருது வாய்ப்பை கோட்டைவிட்ட பிருத்விராஜ்..!

16 ஜன, 2017 - 15:12 IST
எழுத்தின் அளவு:
left-the-chance-of-national-award-actor-prithiviraj

எந்த மொழி சினிமாவானாலும் அவற்றுக்கும் சில பொதுவான நிகழ்வுகள் நிச்சயம் இருக்கும்.. அதில் ஒன்றுதான், ஒரு ஹீரோ நடிக்கவேண்டிய படம் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இன்னொரு ஹீரோவுக்கு கைமாறி, அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்து விடுவதும். தமிழில் அஜித் நடிக்காமல் விலகிய படங்கள் எல்லாம் சூர்யாவை கைதூக்கி விட்ட நிகழ்வுகள் ஏராளம்.. விலகியதற்கு காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பிருத்விராஜுக்கும் கூட இப்படி ஒரு சூழலால் தேசிய விருது கிடைக்கவேண்டியது தட்டிப்போன நிகழ்வும் நடந்திருக்கிறது.


கடந்த 2015ல் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான 'சூ சூ சுதி வால்மீகம்' என்கிற படத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. ரஞ்சித் ஷங்கர் இயக்கிய இந்தப்படத்தில் திக்குவாய் பிரச்சனையால் தாழ்வு மனப்பான்மையில் சிக்கித்தவிக்கும் கேரக்டரில் ஜெயசூர்யா பிரமாதப்படுத்தி இருந்தார்.. ஆனால் கடந்த 2013லேயே இந்தப்படத்தில் பிருத்விராஜ் நடிப்பதாக இருந்து, அதை போஸ்டருடன் பிருத்விராஜே அறிவிப்பும் செய்திருந்தார்.. ஆனால் அதன்பின் என்ன ஆனதோ தெரியவில்லை.. அந்தப்படம் அப்படியே கைவிடப்பட்டது. இத்தனைக்கும் ரஞ்சித் ஷங்கர் டைரக்சனில் அதற்கு முன்பே இரண்டு படங்களில் நடித்தவர்தான் பிருத்விராஜ். ஒருவேளை அந்த கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்திருந்தால் இன்னும் பிரமாதப்படுத்தி இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in