வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஜியோ நிறுவனம் நடத்தும் 62-வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. பல நடிகை, நடிகர்கள் பங்கேற்றனர். பல படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர் அமிர்கானின் நடிப்பில் உருவான தங்கல் திரைப்படம் பல துறைகளின் அடிப்படையில் பல விருதுகளை அள்ளி குவித்தது. ‛தங்கல்' படம் சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருது என மூன்று முக்கிய விருதுகளை பெற்றது.
அமிர்கான் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியான படம் 'தங்கல்'. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுடன், இந்திய அளவில் வசூலில் ரூ. 100 கோடியைத் தாண்டியது. சிறந்த நடிகருக்கான விருது தங்கல் நாயகன் அமிர்கானுக்கு வழங்கப்பட்டது. ஒரே படத்திற்கு மூன்று முக்கிய விருதுகளை பெற்று தங்கல் திரைத்துறையில் புதிய சாதனையை புரிந்துள்ளது.