பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாலிவுட்டின் லக்கி ஸ்டார்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. இவர்களது நடிப்பில் வெளியான ராம்லீலா மற்றும் பாஜிராவ் மஸ்தானி படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. தற்போது இருவரும் பத்மாவதி என்ற பெயரில் நடித்து வருகின்றனர். இதனிடையே தீபிகா நடித்துள்ள ஹாலிவுட் படமான ‛XXX The Xander cage' படத்தின் ப்ரிமீயர் ஷோ மும்பையில் நடந்தது. இதில் ரன்வீர் சிங் உள்ளிட்ட பாலிவுட்டின் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ரன்வீர் சிங், தீபிகாவை எண்ணி பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறியதாவது... ‛‛தீபிகாவின் படத்தை காண மிகவும் ஆவலாய் உள்ளேன். அவரை எண்ணி பெருமை கொள்கிறேன். தீபிகாவின் எனக்கு மிகவும் ஸ்பெஷலான நடிகை. நடிகையாக அவர் கிடைத்தது ஒரு வரம்'' என்று கூறியுள்ளார்.