படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா? | "கரு - தியா" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா? | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு | கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாகும் லிவிங்ஸ்டன் | அனு இம்மானுவேலுவின் நம்பிக்கை | தூக்கமில்லாமல் தவித்த பிந்து மாதவி |
மலையாளத்தில் இருந்து இறக்குமதியான, சுருட்டை முடி அழகி, அனுபமா பரமேஸ்வரனை, கொடி படத்துக்கு பின், ஒரு தமிழ் படத்தில் கூட பார்க்க முடியவில்லை. இதுகுறித்து, கோடம்பாக்கத்தில் விசாரித்தால், அம்மணிக்கு, தமிழ் படங்களில் நடிக்க, அவ்வளவு ஆர்வம் இல்லை என்கின்றனர். அவரது முழு கவனமும், தற்போது தெலுங்கு படங்களில் தான் உள்ளது. ஷதமனம் பவதா என்ற படத்தில், சர்வானந்த் ஜோடியாக நடிக்கிறார். இந்த படம், பொங்கலன்று திரைக்கு வருகிறது. இதுவரை தெலுங்கில், அவர் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இவற்றில், இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இந்நிலையில், ஷதமனம் பவதா படத்தில், முதல் முறையாக, பிரதான ஹீரோயினாக நடித்து உள்ளார். இதுதவிர, எவடு ஒக்கடு என்ற படத்திலும் நடிக்கிறார். இதனால், இப்போதைக்கு தமிழ் படங்கள் வேண்டாமே என, கோலிவுட்டில் இருந்து பேசும் தயாரிப்பாளர்களிடம் உதட்டை பிதுக்குகிறாராம் அனுபமா.