நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
பாலிவுட்டில் ‛பிக் பாஸ் ' என்று அழைக்கப்படும் நடிகர் அமிதாப்பச்சன் காசநோய் பிரசார தூதராக செயல்பட்டு வருகிறார். அவரின் மகத்தான சேவையை கவுரவிக்கும் பொருட்டு, அவருக்கு விருது வழங்க அமெரிக்க தூதரகம் முடிவு செய்தது இருந்தது .அதன்படி, மும்பையில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க தூதர் ரிச்சர்டு ஆர்.வெர்மா, நடிகர் அமிதாப்பச்சனுக்கு விருதினை வழங்கி கவுரவித்தது.விருது வழங்கும் நிகழ்ச்சியில் திரையுலக பிரமுகர்களும், இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள் . விருது பெற்ற புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார் நடிகர் அமிதாப்பச்சன்.
விருது நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் பேசியதாவது......" நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பத்ம விபூஷண் விருது பெற்றேன். இதன் பிறகு ஒரு வாரத்துக்குள், அமெரிக்க தூதரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் காசநோய் விழிப்புணர்வு பிரசார பணியில் நீங்கள் ஈடுபடவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டு இருத்தது . உடனடியாக அதற்கு நான் ஒப்புக்கொண்டேன் " என்று தெரிவித்தார்.