ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‛ஓ காதல் கண்மணி' படம் ஹிந்தியில் ‛ஓகே ஜானு' என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் ஹீரோ - ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இப்படம் இந்தவாரம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரத்தாவிடம் உங்களின் ‛ஜானு' யார் என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து ஸ்ரத்தா கூறியதாவது...
‛‛என்னுடைய ஜானு வேறுயாருமல்ல எனது நாய் சைலோ தான். நீண்டநாளைக்கு முன்னர் என் வாழ்க்கையில் சைலோ வந்தது. நான் சின்ன வயதாக இருக்கும்போது என் அப்பா எனக்கு பரிசாக வழங்கினார். அப்போது முதல் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக சைலோ மாறிவிட்டது. அதுமட்டுல்ல அது என்னுடைய ராசியும் கூட... சில சமயம் அது என்னுடன் யோகா கூட செய்யும்'' என்று கூறியுள்ளார்.