Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சின்னதம்பி'க்கு தாலி பற்றி தெரியாதது ஏன்? - விடை கிடைத்தது

05 ஜன, 2017 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Answer-reveled-why-chinnathambi-did-not-know-about-Thaali

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு மற்றும் பலர் நடித்து 1991ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சின்ன தம்பி'. இளையராஜாவின் இனிமையான பாடல்களாலும், பிரபு -குஷ்புவின் அற்புதமான ஜோடிப் பொருத்தத்தாலும் இந்தப் படம் பல ஊர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. படம் ஒரு பக்கம் ஓடினாலும், சில கேள்விகளையும் எழுப்பியது.


படத்தில் நாயகன் பிரபு அறிவு வளர்ச்சி அதிகமில்லாதவராக இருப்பார். படத்தில் அவருக்கு 'தாலி' பற்றி கூட எதுவும் தெரியாது. அப்படித் தெரியாமல்தான் நாயகியான குஷ்புவுக்கும் தாலி கட்டியிருப்பார். படத்தின் கதையை இந்தத் தாலியைச் சுற்றித்தான் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் படம் வந்ததிலிருந்து இன்று வரை அது எப்படி 'சின்ன தம்பி' கதாபாத்திரத்திற்குத் தாலி பற்றி தெரியாமல் இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.


சமீபத்தில் இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குனர் பி.வாசு, ''சின்ன தம்பி' படத்தில் பிரபுவின் கதாபாத்திரத்திற்கு 'தாலி' பற்றி எதுவுமே தெரியாது. அதை படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே சொல்லியிருப்பேன். ஒரு சீரியசான விஷயத்தை ஒரு நகைச்சுவைக் காட்சியில் வைத்திருந்ததால் அதை பலர் கவனிக்கவில்லை.


குஷ்பு வீட்டில் சமையல்காரராக வேலை பார்ப்பவர் கவுண்டமணி. அதே வீட்டிலேயே இஸ்திரி போடுபராக வேலை செய்பவர் அனுஜா. பிரபுவிடம், அனுஜா தாலியைக் கொடுத்து கவுண்டமணி, இதை தன்னுடைய கழுத்தில் எப்போது கட்டுவார் எனக் கேட்டு வரும்படி அனுப்புவார். பின்னர், இது என்ன நானே உன் கழுத்தில் கட்டுகிறேனே என பிரபு சொல்வார். இதுதான் அந்தக் காட்சி. பிரபுவுக்கு தாலியைப் பற்றி தெரியாது என்பதற்காக வைக்கப்பட்ட காட்சிதான் அது. அது ஒரு நகைச்சுவைக் காட்சியாக வந்ததால் அதைப் பற்றி பலர் கவனம் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்,” என்றார்.


இனிமேலும், யாரும் 'சின்னதம்பி'க்கு தாலி பற்றி தெரியாது என விமர்சனம் செய்ய வேண்டாம். சந்தேகமிருந்தால் யு டியூபில் அந்தக் காட்சியைத் தேடிப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள். 25 வருடங்கள் கழித்து ஒரு சந்தேகத்திற்கு இன்றுதான் விடை கிடைத்துள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in