தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சக்க போடு போட்டு கொண்டிருக்கும் படம் ‛தங்கல்'. இதைத்தொடர்ந்து அமீர்கான் ‛தூம்-3' படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளார். படத்திற்கு ‛தக் ஆப் ஹிந்துஸ்தான்' என்று பெயரிட்டுள்ளார்கள். இந்தப்படத்தில் அமீர்கான் உடன் அமிதாப் பச்சனும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க உள்ளார். அமிதாப்புடன் நடிக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருப்பதாக ஏற்கனவே அமீர்கான் கூறியிருந்தார். இப்போது அமீர் போன்றே இயக்குநர் விஜய் கிருஷ்ணாவும், அமிதாப்பை இயக்கும் ஆவலில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதுப்பற்றி விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா கூறியிருப்பதாவது... ‛‛திறமை வாய்ந்த மிகப்பெரிய நடிகர் அமிதாப். அவரின் மிகப்பெரிய ரசிகன் நான். அமிதாப் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. இன்றைக்கு சினிமாவிற்கு பலரும் வர காரணம் அவர் தான். இன்றைக்கு நான் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கும் அவர் தான் காரணம், இதை அவரிடமே சொல்லியிருக்கிறேன். அமிதாப்பை இயக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன், அதேசமயம் கொஞ்சம் பயமாகவும் உள்ளது, அந்தபயமும் அவரை இயக்கும் எதிர்பார்ப்பால் வந்தது தான், எல்லாம் நல்லப்படியாக நடக்கும் என நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
‛தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் துவங்க உள்ளது. அடுத்தாண்டு தீபாவளிக்கு படம் ரிலீஸாக உள்ளது. இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரிக்க உள்ளார்.