ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் மோஸ்ட் வான்ட்டட் ஹீரோவாக இருப்பவர் அக்ஷ்ய் குமார். இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தாண்டு ‛‛ஜாலி எல்எல்பி-2, 2.O'' உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸாக உள்ளனர். இதுதவிர 2018-ம் ஆண்டில் கோல்டு, கிராக் உள்ளிட்ட படங்களும் ரிலீஸாக உள்ளன. இப்படி பிஸியாக வலம் வரும் அக்ஷ்ய், அடுத்தப்படியாக சல்மான்கான் படத்தில் நடிக்க உள்ளார். ஆமாம் சல்மானும், கரண் ஜோகரும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். இதில் அக்ஷ்ய் குமார் தான் ஹீரோவாக நடிக்கிறார். பிரமாண்டமாக உருவாக உள்ள இப்படத்தை பஞ்சாபி மொழியின் பிரபல இயக்குநர் அனுராக் சிங் இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை சல்மான் தன் டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
அதில், ‛‛எனது எஸ்கேஎப் பிலிம்ஸ், கரண் ஜோகருடன் இணைந்து, அக்ஷ்ய் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. இப்படம் 2018-ம் ஆண்டு ரிலீஸாகும்'' என்று கூறியிருக்கிறார்.