டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
பிரபல பாலிவுட் நடிகை தந்திதாதாஸ். இந்திய சினிமாவின் அறிவுஜீவி நடிகைகளில் ஒருவர். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், விஷ்வதுளசி, நீர்ப்பறவை படங்களில் நடித்தார். 50க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துள்ள நந்திதா, கடந்த 2002ம் ஆண்டு சவுமியா சென் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். 6 வருடம் அவருடன் வாழ்ந்தவர் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து, விவாகரத்து செய்தார்.
அதன்பிறகு 2010ம் ஆண்டு தொழில் அதிபர் சுபோத் மஸ்காராவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நந்திதா, சுபோத் மஸ்கராவை பிரிந்து வாழ்ந்தார். இப்போது அவரையும் விவாகரத்து செய்ய இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நானும், சுபோத்தும் பிரிந்து வாழ்கிறோம் என்பது உண்மைதான். இது இருவரும் சேர்ந்து எடுத்த நல்ல முடிவு. யாரும் யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை. ஒரு குழந்தை இருக்கும்போது இதுபோன்ற முடிவுகள் கடினமானது என்று தெரியும். ஆனாலும் குழந்தை வளர்ப்பு அதன் எதிர்காலம் இரண்டிலும் இருவரும் இணைந்திருப்போம். இதற்குமேல் இதுபற்றி பேச எதுவும் இல்லை. விரைவில் இருவரும பரஸ்பரம் முழு சம்மத்துடன் விவாகரத்து செய்து கொள்ள இருக்கிறோம் என்கிறார் நந்திதாதாஸ்.