மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஐதராபத்தில் உள்ள உருது பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. சிறந்த கலைச்சேவைக்காகவும், உழைப்பால் உயர்ந்ததற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் பல்கலைகழக வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஷாருக்கான், டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டு பேசியதாவது...
‛‛எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியதை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு நான் தகுதி உள்ளவனா என்று தெரியவில்லை. தகுதியுள்ளவனாக முயற்சி செய்வேன். டாக்டர் பட்டம் பெறும் இந்த காட்சியை காண என் பெற்றோர்கள் இல்லையே என்று வருந்துகிறேன். அவர்கள் இந்த காட்சியை கண்டிருந்தால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். என்றாலும் எனது தாய் பிறந்த ஊரான ஐதராபாத்தில் நான் டாக்டர் பட்டம் பெறுவதை நினைத்து பூரிப்படைகிறேன்'' என்றார் ஷாருக்கான்.