அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
அர்சத் வர்சி, போமன் இரானி ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் ‛ஜாலி எல்எல்பி'. சூப்பர் ஹிட்டான இப்படம் தமிழில் ‛மனிதன்' என்ற பெயரில் உதயநிதி நடிப்பில் வெளிவந்தது. ஹிந்தியில் ஹிட்டான அளவுக்கு தமிழில் ஹிட்டாகவில்லை. இந்நிலையில் முதல்பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ஜாலி எல்எல்பி படத்தின் இரண்டாம் பாகம் ஜாலி எல்எல்பி 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. சுபாஷ் கபூரே இயக்குகிறார். அக்ஷ்ய் குமாரும், ஹூமா குரேஷியும் முக்கியமான ரோலில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் படத்தின் டிரைலர் டிச.,19ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. கூடவே அமீர்கானின் ‛டங்கல்' படத்துடன் சேர்த்தும் ஜாலி எல்எல்பி-2 டிரைலரையும் வெளியிட உள்ளார்கள். இப்படம் அடுத்தாண்டு பிப்.,10-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.