தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு பக்கம் பணப் பிரச்சனை, மறு பக்கம் மனப் பிரச்சனை என தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. கடந்த ஒரு மாத காலமாகவே வங்கிகளில் தங்களது பணத்தை எடுக்க முடியாதா, ஏடிம்களில் பணம் வருமா என தமிழ்நாடு மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார். அந்தப் பிரச்சனையால் சினிமா பார்க்க வரும் ரசிகர்கள் வெகுவாகவே குறைந்து போனதாக திரையுலகினர் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேன்கிங் வசதி உள்ளவர்கள் மட்டும் குறிப்பாக மாநகரங்களில் ஆன்லைன் மூலம் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், 'ஏ' சென்டர்களில் மட்டுமே படங்களின் வசூல் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா மறைவால் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு மக்கள் மனப் பிரச்சனையிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் பெரும்பாலான மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்த சில நாட்களில் கன மழை வரப் போவதாக வானிலை மையமும் அறிவித்துள்ளது. இவற்றோடு, நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் வேறு ஆரம்பமாக உள்ளது.
இத்தனை சங்கடங்களையும் எப்படியும் சமாளித்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் நாளை 'சென்னை 28 - இன்னிங்ஸ் 2, பறந்து செல்ல வா, அட்டி' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. 'சென்னை 28' படம் 2007ம் ஆண்டு வெளிவந்து எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றவர்கள், நாளை வெளியாக உள்ள இரண்டாவது இன்னிங்ஸிலும் முன்னிலை பெறுவார்களா ?. 'அட்டி' படம் இதற்கு முன் இரண்டொரு முறை வெளியீட்டு அறிவிப்பு வந்து தள்ளிப் போய் நாளை வெளியாக உள்ளது. 'பறந்து செல்ல வா' படம் முற்றிலும் சிங்கப்பூரில் படமாக்கப்பட்ட ஒரு படம்.
பெரிய நட்சத்திரங்களின் படங்கள் இவையில்லை என்றாலும் அவர்களது நம்பிக்கையில் எப்படி வெற்றி பெறப் போகிறார்கள் என்பதுதான் கேள்வியே.