தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆதம்தாசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ள படம் பாம்பு சட்டை. பாபிசிம்ஹாவை இன்னொரு புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்தும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவர்களுடன் தாமிரபரணி பானுவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.
மேலும், பாம்புசட்டை படத்தில் கிளாமர், வன்முறை காட்சிகள் எதுவும் இல்லை. அதனால் கண்டிப்பாக யு சான்றிதழ்தான் கிடைக்கும் என்று கூறும் அப்படத்தின் டைரக்டர் ஆதம்தாசன், ஒரு வாரத்திற்கு முன்பே தணிக்கைக்குழுவின் பார்வைக்கு படத்தை அனுப்பி விட்டோம். அதனால் இன்னும் சில தினங்களில் படத்திற்கான சான்றிதழ் என்னவென்று தெரிந்து விடும். அதோடு, டிசம்பர் 23-ந்தேதி சூர்யாவின் சிங்கம்-3 வெளியாகும் அதே நாளில் பாம்புசட்டை படத்தை யும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ரிலீசுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்.