‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பார்த்திபன்-விஷ்ணு நடித்த மாவீரன் கிட்டு படத்தை இயக்கிய சுசீந்திரன் அடுத்தபடியாக தனது முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கயிருப்பதாகத்தான் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் விக்ராந்த் நாயகனாகவும், கேரளாவில் இருந்து ஒரு மலையாள நடிகை இயக்குமதியாகயிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த படம் குறித்து விசாரித்தபோது, வெண்ணிலா கபடிக்குழு-2 படத்தை சுசீந்திரன் இயக்கவில்லை என்று தெரியவருகிறது.
அதாவது, மாவீரன் கிட்டு படத்தை இயக்கி வந்தபோதே தமிழ், தெலுங்கு மொழிகளில் விக்ராந்தை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வந்த சுசீந்திரன், இப்போது அந்த படவேலைகளில்தான் இருக்கிறாராம். இப்படத்தைத் தொடர்ந்துதான் வெண்ணிலா கபடிக்குழு-2 படப்பிடிப்பு தொடங்குகிறதாம். ஆனால் அந்த படத்தை சுசீந்திரன் இயக்கவில்லையாம். கதை-வசனம் மட்டுமே எழுதுகிறாராம். அவரது உதவியாளர் ராஜசேகர் என்பவர்தான் படத்தை இயக்குகிறாராம். அதில், ஹீரோவாக விக்ராந்த் நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக மலையாள நடிகை நடிக்கிறாராம். மற்றபடி சூரி உள்பட அனைவரும் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்தவர்களே இடம்பெறுகிறார்களாம்.