Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நவம்பர் மாதத்தில் பத்தே படங்கள் - ஓர் பார்வை

07 டிச, 2016 - 17:38 IST
எழுத்தின் அளவு:
Only-ten-movies-released-in-November

2016ம் ஆண்டின் கடைசி மாதத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டிலும் வழக்கம் போலவே கடந்த சில ஆண்டுகளைப் போல அதிகமான படங்கள் வெளியாகும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக இருந்து வரும் பல்வேறு பிரச்சனைகளால் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 200 ஐத் தாண்டிவிடுமா என ஒரு ஐயத்துடனே பார்க்க வேண்டியிருக்கிறது.


நவம்பர் மாதம் வரை சுமார் 181 படங்கள் வரை வெளிவந்துள்ளன. டிசம்பர் மாத முதல் வாரத்தில் 4 படங்கள் வெளிவந்து இதுவரை 185 படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வொர வெள்ளிக் கிழமை நான்கைந்து படங்களாவது வெளிவரலாம். அடுத்து மூன்று வெள்ளிக்கிழமைகளில் வாரம் 4 படங்கள் வெளிவந்தால் கூட 2016ம் ஆண்டு படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்துவிடும்.


சில்லறைத் தட்டுப்பாடு, ஜெயலலிதா மறைவு என மக்கள் சோர்ந்து போயுள்ள இந்த சமயத்தில் சினிமாவைப் பார்ப்பதற்கு அவர்கள் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டுவார்கள் என்பது சந்தேகம்தான். பொங்கலுக்குப் பிறகே வெளியாகும் புதிய படங்களுக்கு ஒரு புத்துயிர் கிடைக்கும் என்பதே உண்மை.


நவம்பர் மாதத்தைப் பொறுத்தவரையில் மொத்தமாக பத்தே பத்து படங்கள் தான் வெளியாகின. தீபாவளிக்கு எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வெளிவராததால் அந்த மாதத்தில் நிறைய படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த பணக் கட்டுப்பாட்டால் மக்களின் பார்வை சில்லறை நோட்டுகளைப் பெறுவதில் இருந்ததே தவிர சினிமாவைப் பார்ப்பதில் இல்லாமல் போனது.


நவம்பர் மாதம் 4ம் தேதி 'இனி அவனே' என்ற திரைப்படம் வெளியானது. இப்படி ஒரு படம் வந்ததா என்பது கூடப் பலருக்கும் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம்தான்.


நவம்பர் 11ம் தேதி கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்த, 'அச்சம் என்பது மடமையடா' படமும், காளிதாஸ் ஜெயராம், பிரபு, ஆஷ்னா சவேரி மற்றும் பலர் நடித்த 'மீன் குழம்பும் மண் பானையும்' படங்கள் வெளிவந்தன. இதில் 'அச்சம் என்பது மடமையடா' படம் மட்டும் 'ஏ' சென்டர்களில் நன்றாக ஓடியது. மற்ற சென்டர்களில் சுமாராக ஓடியது. ஆனாலும், கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த 'விண்ணைத் தாண்டி வருவாய' படத்தின் வெற்றியை இந்தப் படம் எட்டவில்லை என்பதே உண்மை.


'மீன் குழம்பும் மண் வாசனையும்' படத்தில் நாயகனாக அறிமுகமானார் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். தமிழைப் பொறுத்தவரையில் அவருக்கு இது மோசமான ஒரு அறிமுகம்தான். அவர் முதலில் நடிக்க ஆரம்பித்த 'ஒரு பக்க கதை' படம் முதலில் வந்திருந்தால் அவருடைய திரையுலக அறிமுகத்திற்கு சிறப்பாக அமைந்திருக்கும்.


நவம்பர் 18ம் தேதி ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த 'கடவுள் இருக்கான் குமாரு' படமும், 'அஞ்சுக்கு ஒண்ணு' படமும் வெளிவந்தது. ராஜேஷ் இதற்கு முன் இயக்கிய 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படமும் தோல்வியடைந்ததால் இந்தப் படத்திலாவது அவர் கரையேறிவிடுவார் என திரையுலகத்தினரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்தப் படத்திலும் அவர் ஏமாற்றிவிட்டார். வெறும் நகைச்சுவைத் தோரணங்களை மட்டுமே வைத்து அலங்கரித்துவிட்டார். 'அஞ்சுக்கு ஒண்ணு' படமும் இந்த ஆண்டுப் படங்களின் பட்டியலில் பத்தோடு பதினொன்றாக இணைந்துவிட்டது.


நவம்பர் 24ம் தேதி ஜீவா, காஜல் அகர்வால் நடித்த 'கவலை வேண்டாம்' படம் வெளியானது. இதற்கு முன் ஜீவா நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால் இந்தப் படமாவது அவரைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற சூழலில்தான் வெளியானது. ஆனாலும், ஜீவாவே நினைத்தாலும் கூட இந்தப் படத்தைக் காப்பாற்ற முடியாத நிலையாகிவிட்டது. பட வெளியீட்டிற்குப் பின் கூட ஜீவா மறந்துவிட்டு, காஜல் அகர்வாலை வைத்தாவது படத்தை ஓட்டி விடலாம் என நினைத்தார்கள், அதுவும் முடியாமல் போனது.


நவம்பர் 25ம் தேதி 'இளமி, கண்ல காச காட்டப்பா, விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும், பட்டதாரி' ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த நான்கு படங்களில் 'இளமி' படம் மட்டுமே நல்ல முயற்சியாகத் தெரிந்தது. தமிழர்கள் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையப்படுத்தி ஒரு அருமையான பதிவாக படத்தை தந்திருந்தார்கள். மற்ற படங்கள் தயாரிப்பாளர்களுக்கு கண்ணில் காசைக் காட்டியிருந்தால் மகிழ்ச்சியே.


மொத்தத்தில், நவம்பர் மாதம் வெளிவந்த 10 படங்களில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தவிர மற்ற படங்கள் வெற்றிக் கோட்டை நெருங்கக் கூடவில்லை என்பதே உண்மை.


2016ம் ஆண்டின் 11வது மாதமான நவம்பர் மாதத்தில் வெளியான 10 படங்களில் 1 படம் மட்டுமே வெற்றி என்பது யோசிக்க வேண்டிய விஷயம். இந்த ஆண்டில் குறைவான படங்கள் வெளிவந்த மாதமாக நவம்பர் மாதம் அமைந்துவிட்டது.


படங்களின் எண்ணிக்கை எப்போதுமே சாதனையாக அமையப்போவதில்லை. குறைவான படங்கள் வந்தாலும் குறையில்லாத படங்களாக வந்தால் மட்டுமே வசூல் குவியும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in