இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சென்னையில் உள்ள இண்டோ சினி அப்ரிசேஷன் என்ற அமைப்பு ஆண்டு தோறும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. சென்னையில் நடக்கும் பட விழாக்களில் இதுவே பெரியது. இதற்கு தமிழக அரசும் நிதி உதவி அளிக்கிறது. இந்த ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற 15ந் தேதி தொடங்கி 22ந் தேதிவரை 7 நாட்கள் நடக்கிறது. இதில் ஹங்கேரி, இத்தாலி, செர்பியா, பிரான்ஸ் போலந்து, துனிசியா, ஜப்பான், ருமேனியா, பிலிப்பைன்ஸ் உள்பட சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த 165 படங்கள் திரையிடப்படுகிறது.
சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக போட்டிப்பிரிவில் தமிழ் படங்கள் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழாவில் ஜோக்கர், பசங்க 2, தேவி, 24, கர்மா, நானும் ரவுடிதான், உறியடி, ரூபாய், சில சமயங்களில், இறைவி, அம்மா கணக்கு, தர்மதுரை ஆகிய 12 படங்கள் மோதுகிறது.