ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மூளையிலிருந்து வெளியேறிய இரத்தகசிவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் சிகிச்சை இன்று(10.10.11) காலமானார். இந்தியாவில் கஜல் பாடல்களை பாடி அதில் புதுமை ஏற்படுத்தியவர் ஜக்ஜித் சிங். முதன்முதலில் மல்டி டிராக்கில் கஜல் இசையை பதிவு செய்தவர் இவர் தான். இந்தி, உருது, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி அசத்தியிருக்கும் ஜக்ஜித் சிங், 1941ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் பிறந்தவர். பிரபல பாடகி சித்ரா சிங்கை மணந்த இவர், தனது மனைவியுடன் சேர்ந்து பல அற்புதமான ஆல்பங்களையும் இயக்கியுள்ளார். கஜலை தவிர்த்து பிரேம் கீத், சாத் சாத், அர்த் என பல சூப்பர் ஹிட் படங்களுக்கும் பாடியுள்ளார். இசைத்துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இந்நிலையில் மூளையில் ஏற்பட்ட இரத்தகசிவு காரணமாக, மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜக்ஜித் சிங், சிகிச்சை பலனின்றி இன்று(10.10.11) காலை மரணம் அடைந்தார்.
ஜக்ஜித் சிங்கின் மரணத்திற்கு பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், நடிகர் அமிதாப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.