ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு மொழியில் என்னதான் வளர்ந்து நின்றாலும் அப்படியே அடுத்தடுத்த மொழிகளுக்கும் சென்று அங்கும் தங்களை ஒரு 'ஸ்டார்' ஆக காட்டிக் கொள்ள வேண்டும் என்று இன்றைய தமிழ் ஹீரோக்கள் பலருக்கு பேராசை இருக்கிறது.
இளம் ஹீரோக்களாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருந்த போது அவர்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து இந்திய அளவில் பேசப்படும் நடிகர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு அந்த அளவிற்கு தமிழ் நடிகர்கள் யாராலும் போக முடியவில்லை.
அஜித், விஜய் ஆகியோர் கூட தமிழுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வேறு மொழிப் படங்களில் நடிக்க அவர்களுக்கு விருப்பமில்லை. அதனால்தான் தமிழ் ரசிகர்கள் அவர்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வரும் சூர்யா, தனக்கு தெலுங்கு தேசத்தில் இருக்கும் கொஞ்சமான செல்வாக்கை மேலும் அதிகப்படுத்த, 'எஸ் 3' படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை ஹைதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் மட்டுமே படமாக்கினார். அதை, நேரடித் தெலுங்குப் படம் போல காட்ட வேண்டும் என்பது படக்குழுவினரின் எண்ணம்.
தமிழில் வரும் 27ம் தேதியன்று 'எஸ் 3' படத்தின் இசையை வெறும் இணையதளங்கள் மூலமே வெளியிடுகிறார்கள். ஆனால், தெலுங்கு இசை வெளியீட்டை நாம் முன்னதே சொன்னது போல டிசம்பர் 5ம் தேதி ஹைதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமான விழாவாக நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். இதற்கான ஏற்பாடுகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டதாம். அதோடு அங்குள்ள மீடியாக்கள் அனைத்திற்கும் அவர் பேட்டி கொடுக்கவும் நேரம் ஒதுக்கியுள்ளாராம். 'எஸ் 3' சம்பந்தமாக தமிழில் இதுவரை அவர் எந்த மீடியாவையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழுக்கு முக்கியத்துவம் தராமல் தெலுங்கிற்கு முக்கியத்துவம் தரும் சூர்யாவின் இந்தப் முடிவை ஆச்சரியமாகப் பார்க்கிறது கோலிவுட் வட்டாரம்.
டிசம்பர் 16ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது 'எஸ் 3'.