பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் இளம் ஹீரோயின்களில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர்.சில மாதங்களுக்கு முன் இயக்குநர் கரண் ஜோகர் இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த வெற்றி பெற்ற ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் நடித்து இருந்தார். இதைத்தொடர்ந்து அனுஷ்கா தனது அடுத்தப்படத்தில் நடித்து வருகிறார்.இயக்குநர் அன்ஷய் லால் இயக்கத்தில் அனுஷ்கா ,நடிகர் தில்ஜித் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து, உருவாகியிருக்கும் படம் ‛பில்லாரி.
இப்படத்தின் கதை பஞ்சாப்பை மையமாக வைத்து எடுக்கபடயிருக்கிறது. ரொமான்ஸ், காமெடி உள்ளிட்ட ஜனரஞ்சகமான படமாக ‛பில்லாரி' உருவாக இருக்கிறது. இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடித்திருப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். சில மாதங்களுக்கு ‛பில்லாரி' படத்தின் ரிலீஸ் தேதியை அனுஷ்கா அறிவித்திருக்கிறார். அதில் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி படம் வெளியாக இருப்பதாக கூறியிருத்தார் .ஆனால் அதை மறுத்தார் அனுஷ்கா.இதைப்பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
டுவிட்டரில் அனுஷ்கா கூறியதாவது....."‛பில்லாரி' படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 24 ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் படமாக அமைய இருக்கிறது " என்றார்.