‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டின் மிகச்சிறந்த திறமையான நடிகைகளில் வித்யாபாலன் குறிப்பிடத்தக்கவர். தற்போது இவர் கஹானி 2 படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு படத்தின் புரொமோஷன் வேலையில் படுபிஸியாக ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் வித்யாபாலன் உடன் அர்ஜூன் ராம்பாலும் போலீஸ் அதிகாரியாக ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.
சமீபத்தில் ஒரு புரொமோஷனில் அர்ஜூன் ராம்பால் பற்றியான கேள்விக்கு பதிலளித்த வித்யாபாலன், ‛‛மிகச்சிறந்த நடிகர் அர்ஜூன் ராம்பால், சமீபகாலமாக அவர் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். அவரின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்போது சிரித்தாலும் உடனே நானும் சிரித்துவிடுவேன். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த பட யூனிட்டே சிரித்துவிடும். அவருடைய சிரிப்பில் அந்த மாதிரி ஒரு சிறப்பு உள்ளது'' என்று கூறியுள்ளார்.
கஹானி-2 படம், வருகிற டிசம்பர் 2-ம் தேதி ரிலீஸாக உள்ளது.