விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
8 ஆண்டுகளுக்கு பிறகு ராக் ஆன் படத்தின் இரண்டாம் பாகமாக கடந்தவாரம் ராக் ஆன்-2 வெளியானது. முதல்பாகத்தில் நடித்த பர்கான் அக்தர், அர்ஜூன் ராம்பால் ஆகியோரே இரண்டாம் பாகத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இவர்களுடன் ஸ்ரத்தா கபூரும் நடித்திருந்தார். இப்படம் வெளியான நான்கு நாட்களில் வெறும் ரூ.9 கோடி தான் வசூலித்திருக்கிறது. இது படக்குழுவினரை வருத்தமடைய செய்துள்ளது. குறிப்பாக அர்ஜூன் ராம்பால் மிகவும் வருத்தத்துடன் உள்ளார்.
இதுப்பற்றி அர்ஜூன் ராம்பால் கூறியிருப்பதாவது... ‛‛படம் வெளியான போது மக்கள் சிக்கனமாக இருக்க வேண்டிய சூழல். மக்கள் எல்லோரும் அனாவசிய செலவுகளை தவிர்த்துவிட்டனர். தற்போதைய சூழலில் யாரும் படம் பார்க்கும் சிந்தனையில் இல்லை. ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதாக வெளியான செய்தி வந்தபோது படத்தை தள்ளி வைக்கலாம் என்று எண்ணினோம். ஆனால் வெளிநாடுகளில் படம் எல்லாம் சென்றாகிவிட்டது. அதனால் படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க முடியவில்லை, அதனால் தான் ராக் ஆன்-2 படம் தோல்வியை தழுவியது'' என்று கூறியுள்ளார்.