தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆபாச பட நடிகையான சன்னி லியோன், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் படங்களில் பரவலாக நடித்துக்கொண்டிருக்கிறார். சில படங்களில் படுகவர்ச்சியாக நடிக்கும் அதேவேளையில் சில படங்களில் ஹோம்லி வேடங்களில் நடித்து வருகிறார். இடையிடையே சில படங்களில் அரைநிவாண காட்சிகளிலும் நடித்து கலக்கி வருவதால் அவரது சம்பளம் படத்துக்குப்படம் எகிறிக்கொண்டேயிருக்கிறது. அந்த வகையில், ஒரு பாடலுக்கு நடனமாடகூட அவர் ஒரு கோடி கேட்பதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஆபாச படங்களில் நடித்து உலக ரசிகர்களுக்கு பிரஷ்ஷரை ஏற்படுத்தி விட்ட சன்னிலியோனுக்கு ரத்தத்தில் நோய் கிருமிகள் கலந்திருப்பதாகவும், அதை உடனடியாக சுத்திகரிப்பு செய்யா விட்டால் பல நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளார்களாம். இதனால் உடனடியாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்போகிறார் சன்னி லியோன். இந்த விசயத்தை அவர் சீக்ரெட்டாக வைத்திருந்தபோதும் எப்படியோ மும்பை மீடியாக்களில் கசிந்து விட்டதாம். இதனால் இந்த சேதி தனது மார்க்கெட்டிற்கு உலை வைத்து விடுமோ என்று கலங்கிப்போயிருக்கிறாராம் சன்னி.