விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பாலிவுட்டில் 20வருடத்திற்கு மேல் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஷாரூக்கானும் ஒருவர். தற்போது, இயக்குநர் கவுரி ஷிண்டே இயக்கத்தில் ஆலியா பட் நடிக்கும் ‛டியர் ஜிந்தகி' படத்தில் முக்கியமான ரோலில், சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் ஜஸ்வர்யாவின் முன்னாள் கணவராக நடித்து இருந்தார். இதைத்தொடர்ந்து கரண் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் ஜஸ்வர்யா - ஷாரூக்கை வைத்து இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதனிடையே இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியாகி வசூலை குவித்த படம் ‛ரா-ஒன்'. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் ஷாரூக் நடித்து இருந்தார்.‛ரா-ஒன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அனுபவ் ‛ரா-ஒன் 2' படத்தை இயக்க போவதாக செய்திகள் வெளியாகின. தற்போது இயக்குநர் அனுபவ் ‛தும் பின் 2' படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த புரொமோஷனில் அனுபவ், ‛ரா-ஒன் 2' படத்தில் நடிக்க ஷாரூக் முனைப்புடன் இருப்பாதாக கூறினார்.
இதைப்பற்றி அனுபவ் கூறியதாவது..."ஷாரூக்கானிடம் ‛ரா-ஒன் 2' படத்தை பற்றி பேசினேன், அவரும் இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வம் இருப்பதாக கூறினார். அதேசமயம் தற்போது சில படங்களில் அவர் நடித்து வருவதால் கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழலில் உள்ளார். எனக்கும் தற்போது நேரமில்லை, மேலும் கதை உருவாக்கவும் சில காலம் தேவைப்படும் என்றார்.