தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல் பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகை மட்டுமல்ல நல்ல பாடகியும் கூட. தற்போது அவர் நடித்துள்ள ராக் ஆன்-2 படத்தில் அனைத்து பாடல்களையும் பாடியிருப்பவர் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதனிடையே அவர் தன்னுடைய படங்களுக்கு மட்டுமல்லாது பிறநடிகைகளின் படங்களுக்கும் பாட தயார் என்று கூறியிருக்கிறார் ஸ்ரத்தா.
இதுப்பற்றி ஸ்ரத்தா கூறியிருப்பதாவது... ‛‛நான் பாடகியாக இருப்பது மகிழ்ச்சி, ராக் ஆன்-2 படத்தில் அனைத்து பாடல்களையும் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தீபிகா, பிரியங்கா சோப்ரா போன்ற நடிகைகளுக்கும் பாட ஆவலாய் இருக்கிறேன். ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை, ஏனென்றால் அவர்கள் இருவரும் தற்போது சர்வதேச நடிகைகளாய் இருக்கின்றனர், அவர்களுடன் நடிக்க பல பிரபலங்கள் காத்திருக்கின்றனர்'' என்று கூறியுள்ளார்.
ஸ்ரத்தா நடித்துள்ள ‛ராக் ஆன்-2' படம் வருகிற நவ., 11-ம் தேதி ரிலீஸாக உள்ளது.