'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் சமூக அக்கறையாளர் என பல முகம் கொண்ட ராகவா லாரன்சின் பிறந்தநாளும் தீபாவளியும் ஒரே நாளில் வருகிறது. ஆனால், இந்த வருட பிறந்தநாளை ஒரு சில காரனங்களுக்காக லாரன்ஸ் கொண்டாடவில்லை.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது... ‛‛பிறந்தநாளும், தீபாவளியும் ஒரே நாளில் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தன்னுடைய ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகளின் சந்தோசத்திற்காக இந்த தீபாவளியை ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகளுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளேன். ஆனால் என்னுடைய பிறந்தநாளை கொண்டாடவில்லை. அனைத்து பத்திரிக்கை தொலைக்காட்சி, இணையதள நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்'' என்று கூறியுள்ளார்.