ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ |
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ரிஷிகேஷ் ஹீரோவாகியிருக்கும் படம் ரம். சஞ்சிதா ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ரிஷிகேஷ் அனிருத்தின் ஒன்றுவிட்ட சகோதரர். இவர்கள் தவிர அஞ்சாதே நரேன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜயராகவேந்திரா தயாரித்துள்ளார். சாய்பரத் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். ரம் என்பது மதுபானத்தின் பெயர் என்றும் ஆங்கில பெயர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதனை இயக்குனர் சாய் பரத் மறுக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ரம் என்பது பழமையான, தூய்மையான தமிழ் சொல். ஆனால் அது தற்போது புழக்கத்தில் இல்லை. ரம் என்றால் தீர்ப்பு என்று பொருள். அதாவது கருணை அற்ற தீர்ப்பு. ஒவ்வொரு மனிதனும், அவனது ஆத்மாவும் செய்யும் எல்லா தீய செயல்களுக்கும் ஒரு நாள் ரம் என்கிற கருணையற்ற தீர்ப்பு வழங்கப்படும் அந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதுதான் படத்தின் கதை. அனிருத் இசை அமைத்து வெளிவந்திருக்கும் "ஹோலா அமிகோ..." என்ற பாடலும் "பேயோபோவிலியா..." என்ற பாடலும் இணையதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றள்ளது. கிராமிய விருது பெற்ற இசை அமைப்பாளர் டி ஜே டிப்ளோ பாராட்டி உள்ளார். அனைத்து பாடல்களையும் பிரமாண்ட விழாவில் வருகிற 2ந் தேதி வெளியிடுகிறோம். என்றார்.