தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக, ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை கஜோல். நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவை விட்டு விலகியவர் மீண்டும் ரீ-என்ட்ரியாக தயாராகி வருகிறார். இதனிடையே தன் கணவர், அஜய், இயக்கி, நடித்து, தயாரித்துள்ள ‛சிவாய்' படம் இன்று வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தின் புரொமோஷனில் கணவருடன் பிஸியாக ஈடுபட்டு இருந்தவர் ‛சிவாய்' படத்தை பார்த்த பின்னர் தன் டுவிட்டர் பக்கத்தில் படம் பற்றி ஒரே வார்த்தையில் கூறியிருக்கிறார்.
அப்படி என்ன சொன்னார்.?, அதாவது கஜோல் தன் டுவிட்டரில், ‛‛தற்போது தான் சிவாய் படத்தை பார்த்தேன், ஒன்றை மட்டும் சொல்கிறேன், இந்தப்படம் நிச்சயம் ‛பைசா வசூல்' என்று கூறியுள்ளார்.