'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 57வது படத்தில் நடித்து வரும் அஜித், இதுவரை 54 தமிழ் படங்களில் நடித்திருப்பவர், தலா ஒரு தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இதில் சந்தோஷ்சிவன் இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்த அசோகா படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு எந்த இந்தி படத்திலும் நடிக்கவில்லை. ஆனபோதும், தற்போது அஜித் தமிழில் நடித் துள்ள சில படங்கள் இந்தியில் டப்பாகி வருகின்றன.
அந்த வகையில், சிவா இயக்கத்தில் அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான வேதாளம் படம் இந்தியில் டப் செய்யப்பட்டு யு-டியூப்பில் வெளியிடப்பட்டது. அதை 50 லட்சம் பேர் பார்த்துள்ளார்களாம். இந்தி ரசிகர்களுக்கிடையே அஜித் படத்திற்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பு காரணமாக, கெளதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தையும் அடுத்து இந்தியில் டப் செய்து வெளியிடப்போகிறார்களாம். அதைத் தொடர்ந்து அஜித்தின் வேறு சில சூப்பர் ஹிட் படங்களும் யு-டியூப்பில் இந்தி பேசும் என்று தெரிகிறது.